பக்கங்கள்

வியாழன், 25 நவம்பர், 2010

இன்றைய பிரார்த்தனை



கீழ்க்காணும் ஏதாவது வாக்கியக்கூவலுடன்
இன்று நீ பள்ளியிலிருந்து திரும்பி வர
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இன்று உன் ஆங்கில ஆசிரியை வரவில்லை...
உன் பெயரை அழைக்கும் நேரம் பெல் அடித்துவிட்டது...
ரீடிங்டெஸ்ட் இருப்பதாய் சொன்னதையே டீச்சர் மறந்து போனார்கள்...
இல்லை டீச்சரை பிரின்சிபிள் எதற்காவது அழைத்துவிட்டார்.

அழுதுகொண்டே ரீடிங்டெஸ்ட்டுக்காக நீ படித்த
ஒன்றாம்வகுப்பின் ஆங்கில புத்தகத்தை
உன் புத்தமூட்டைக்குள் எடுத்து வைக்க
எப்படி நான் மறந்து போனேன்???

1 கருத்து:

  1. தாய்மை. பல முறை பள்ளிக்கு சென்று மகள் மறந்து போன பொருட்களை கொடுத்து விட்டு வந்ததை நினைவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு