தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ஃபிரண்ட் நச்சத்திரம்

இது தான் என் ஃபிரண்ட் நச்சத்திரம்
இரவில் எனக்கு
ஹாய் சொல்லும்..
படுக்கப்போகும் போது
குட்நைட் சொல்லும்,
என்று ஒரேஒருநாள்
அறிமுகம் செய்து வைத்தேன்என் மகனுக்கு.

பத்து நாட்கள் கழித்து
பயணித்துக்கொண்டிருந்தோம் வெளியே...
அம்மா இது டோனியோட நச்சத்திரம்
அவன் அதை பெட்ஸ்டாரா வெச்சிருக்கானாம்
இது ஹனாவோட நச்சத்திரம்
அவள் அதுக்கு பெட்டைம்ஸ்டோரி சொல்வாள்
இது ஆதியோட நச்சத்திரம்
அவன் அதுக்குஃபிங்கர் சிப்ஸ் கொடுத்தானாம்
இது அம்ரூவோட நச்சத்திரம்
அதுக்கும் பர்த்டேட்ரஸ் எடுக்கணும்
ஆகக்கூடி வகுப்பு சிறார்கள் முழுவரும்
தோழர்களாய் கிடைத்ததில்
முன்னைவிட அதிகமாகவே
ஒளிவிடத்துவங்கின நச்சத்திரங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக