தொடர் வண்டியின் உள்ளே
தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள்.
அலுத்துக்கொண்ட அவள் அம்மா
வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்...
மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்..
இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..??
நான் சொன்னேன்..
மலர்கள்.. இல்லை என்றாள்.
ஆடைகள் ...ம்ஹூம் என்றாள்
புத்தகங்கள்... மறுத்தாள்.
பெட்டியின் பக்கத்திலே
சாவியை வரைந்தாள்..
இப்போது கண்ணை மூடிய வண்ணம்
அதை திறக்க வேண்டுமாம்..
.என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம்.
.கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய்
இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்
பக்கங்கள்
வியாழன், 25 நவம்பர், 2010
இன்றைய பிரார்த்தனை
கீழ்க்காணும் ஏதாவது வாக்கியக்கூவலுடன்
இன்று நீ பள்ளியிலிருந்து திரும்பி வர
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இன்று உன் ஆங்கில ஆசிரியை வரவில்லை...
உன் பெயரை அழைக்கும் நேரம் பெல் அடித்துவிட்டது...
ரீடிங்டெஸ்ட் இருப்பதாய் சொன்னதையே டீச்சர் மறந்து போனார்கள்...
இல்லை டீச்சரை பிரின்சிபிள் எதற்காவது அழைத்துவிட்டார்.
அழுதுகொண்டே ரீடிங்டெஸ்ட்டுக்காக நீ படித்த
ஒன்றாம்வகுப்பின் ஆங்கில புத்தகத்தை
உன் புத்தமூட்டைக்குள் எடுத்து வைக்க
எப்படி நான் மறந்து போனேன்???
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)