நீ பயப்படுகிறாயா??
இங்கே நீயும் நானும் மட்டுமே தனித்திருக்கிறோம்...உன்னை வெறுப்பவரோ..அச்சுறுத்துபவரோ, அசூசையடைபவரோ..யாருமே வீட்டிலில்லை..
இங்கே நீயும் நானும் மட்டுமே தனித்திருக்கிறோம்...உன்னை வெறுப்பவரோ..அச்சுறுத்துபவரோ, அசூசையடைபவரோ..யாருமே வீட்டிலில்லை..
கொல்லிகளும் ஸ்பேரேக்களும் நான் வாங்குவதே இல்லை..
நீ என் காதருகே பாடலாம்..
கவிதைத்தாளின் மீது கூட ஆடலாம்...முன்னங்கால்களைத் தேய்த்துத் தேய்த்து என் இலக்கியத்தைப் பிழை திருத்தலாம்...நமக்கு நிறைய நேரமிருக்கிறது..இன்னும் கோப்பையில் தேநீர் நிறைய மிச்சம் இருக்கிறது..நீ நிதானமாக அருந்தி விட்டு வா!!!
ஆஹா அருமை👌.. எனினும் கவனம் அன்பின் மிகுதியால் தேநீரில் உள்ளே விழுந்து விட போகிறது😉
பதிலளிநீக்கு