நல்லநடனம் ஒன்று எப்படி இருக்குமென்று..சொல்லித்தந்தது..ஊதுவத்திப் புகை..யாதொரு தடையுமில்லை, யாதொரு தளையுமில்லை,' தன்னையே கரைப்பதில் கிஞ்சித்தும் கவலை இல்லை..காற்றின் மாயக்கரங்களைக் காதலுடன் பற்றியபடி, பிரபஞ்ச இசைக்கு காதுகொடுத்து ஆடுகிறது அழகாய்...வளைந்தும், சுழன்றும்..நடனம் முடிய முடிய நடனமாய் அது ஆகிப்போனது..ஆடியவர் இங்கில்லை..ஆட்டமும் புலனில்லை..திரிபுரம் எரித்த சிவனின் நடனம் கண்டேனில்லை..என்னால் எரிபட்ட ஊதுபத்தியின் நடனம் அதனினும் குறைவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக