இன்னும்இருக்கிறது...
பேச மிச்சம்...
உன் மார்புச் சூட்டின்
வெப்பம் கொடுத்த கதகப்பில்
ஓயாது பேசும் வாய்...
உன் கைத் தலையணையில்
கண்கள் தாமாக செருகும்வரை
தீர்ப்பதில்லை பேச்சை உதடுகள்...
தூக்கத்திலும்
உம் கொட்டும் உன் உதடுகள்...
நான் பேசிய மிச்சம்
என் கனவுகளில்நீ பேசுகிறாய்...
தொடர் வண்டியின் உள்ளே
தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள்.
அலுத்துக்கொண்ட அவள் அம்மா
வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்...
மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்..
இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..??
நான் சொன்னேன்..
மலர்கள்.. இல்லை என்றாள்.
ஆடைகள் ...ம்ஹூம் என்றாள்
புத்தகங்கள்... மறுத்தாள்.
பெட்டியின் பக்கத்திலே
சாவியை வரைந்தாள்..
இப்போது கண்ணை மூடிய வண்ணம்
அதை திறக்க வேண்டுமாம்..
.என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம்.
.கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய்
இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்
பக்கங்கள்
வியாழன், 14 ஜனவரி, 2010
காத்திருக்கிறது மலை
வருமா மீண்டும் ஒருமுறை
அந்தப் பொழுதுகள்,
நீண்டு நெளிந்திருந்த மலைப்பாதை வளைவில்,
பனிகொட்டும் பகல்வேளையில் கைகோர்த்து திரிந்த காலம்,
பைன் மரக்கூம்புகளையும் வாடா மஞ்சள் மலர்களையும்
தேவையே இல்லாமல் சேகரித்தோம்...
குளிர்காற்றில் வெறும் வாயால்பனி புகைத்தோம்...
தேயிலைச் சரிவுகளில்கால் கொள்ளாமல் ஓடித் திரிந்தோம்...
இப்போதும் பைன் மரம்கூம்புதிர்க்கிறது...
மஞ்சள் வாடா மல்லியும் மலர்கிறது...
தேயிலையும் துளிர்க்கிறது...
நீயும் நானும் மட்டும்மாறிப்போனோம்..
நீ உன் கணிணியுடனும்
நான் பிள்ளைகளுடனும்..
ஏக்கத்துடன் காத்திருக்கிறது
மலை...
அந்தப் பொழுதுகள்,
நீண்டு நெளிந்திருந்த மலைப்பாதை வளைவில்,
பனிகொட்டும் பகல்வேளையில் கைகோர்த்து திரிந்த காலம்,
பைன் மரக்கூம்புகளையும் வாடா மஞ்சள் மலர்களையும்
தேவையே இல்லாமல் சேகரித்தோம்...
குளிர்காற்றில் வெறும் வாயால்பனி புகைத்தோம்...
தேயிலைச் சரிவுகளில்கால் கொள்ளாமல் ஓடித் திரிந்தோம்...
இப்போதும் பைன் மரம்கூம்புதிர்க்கிறது...
மஞ்சள் வாடா மல்லியும் மலர்கிறது...
தேயிலையும் துளிர்க்கிறது...
நீயும் நானும் மட்டும்மாறிப்போனோம்..
நீ உன் கணிணியுடனும்
நான் பிள்ளைகளுடனும்..
ஏக்கத்துடன் காத்திருக்கிறது
மலை...
ஒரு பிடிச் சிரிப்பு
மூடிய கையில் சிறைப்படுத்தி வைத்திருக்கிறேன்...
என் மகனின் ஒருபிடிச் சிரிப்பு...
அவ்வப்போது திறந்து பார்த்து,
அது தப்பித்து போகுமுன்படக்கென்று மூடிவிடுவேன்...
அவனைப் போல குறும்பு,அவன் சிரிப்பும்...
ஒரு இடத்தில்அடைத்து வைத்தல் கடினம்...
இன்று வேலை முடியும் வரை..,
கைக்குள் சிரி மகனே...
வீடு வந்ததும்...
கை கொள்ளாச் சிரிப்பைஅள்ளிப் பூசிக் கொள்கிறேன்....
என் மகனின் ஒருபிடிச் சிரிப்பு...
அவ்வப்போது திறந்து பார்த்து,
அது தப்பித்து போகுமுன்படக்கென்று மூடிவிடுவேன்...
அவனைப் போல குறும்பு,அவன் சிரிப்பும்...
ஒரு இடத்தில்அடைத்து வைத்தல் கடினம்...
இன்று வேலை முடியும் வரை..,
கைக்குள் சிரி மகனே...
வீடு வந்ததும்...
கை கொள்ளாச் சிரிப்பைஅள்ளிப் பூசிக் கொள்கிறேன்....
ராமன் குறித்த நிபந்தனைகள்
வில்லொடிக்க வேண்டாம்...,
அசுர வதை புரிந்து
ஆண்மை நிரூபிக்கத் தேவையில்லை...
நெடு நெடு உயரமும்
நெல்லிக்காய் நிறமும் கூட வேண்டாம்...
மாயமான் தேடிஅலைய விடமாட்டோம்...
காப்பி சீப்பியபடிபஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டபடி
பதறாமல் பெண் பார்க்கலாம்...
வனவாசம் அழைத்தாலும்வரத் தயார்...
முன்நெற்றி முடி மட்டும்
வெள்ளையாய்ப் போக
முப்பதை நெருங்கிறது வயது...
தளர்ந்து போனது ராஜகுமாரன்,
ராமன் குறித்த நிபந்தனைகள்...
அசுர வதை புரிந்து
ஆண்மை நிரூபிக்கத் தேவையில்லை...
நெடு நெடு உயரமும்
நெல்லிக்காய் நிறமும் கூட வேண்டாம்...
மாயமான் தேடிஅலைய விடமாட்டோம்...
காப்பி சீப்பியபடிபஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டபடி
பதறாமல் பெண் பார்க்கலாம்...
வனவாசம் அழைத்தாலும்வரத் தயார்...
முன்நெற்றி முடி மட்டும்
வெள்ளையாய்ப் போக
முப்பதை நெருங்கிறது வயது...
தளர்ந்து போனது ராஜகுமாரன்,
ராமன் குறித்த நிபந்தனைகள்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)