தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

வியாழன், 14 ஜனவரி, 2010

ராமன் குறித்த நிபந்தனைகள்

வில்லொடிக்க வேண்டாம்...,
அசுர வதை புரிந்து
ஆண்மை நிரூபிக்கத் தேவையில்லை...
நெடு நெடு உயரமும்
நெல்லிக்காய் நிறமும் கூட வேண்டாம்...
மாயமான் தேடிஅலைய விடமாட்டோம்...
காப்பி சீப்பியபடிபஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டபடி
பதறாமல் பெண் பார்க்கலாம்...
வனவாசம் அழைத்தாலும்வரத் தயார்...
முன்நெற்றி முடி மட்டும்
வெள்ளையாய்ப் போக
முப்பதை நெருங்கிறது வயது...
தளர்ந்து போனது ராஜகுமாரன்,
ராமன் குறித்த நிபந்தனைகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக