தொடர் வண்டியின் உள்ளே தொடர்ந்த வண்ணம் இருந்தன..மஞ்சுவின் கேள்விகள். அலுத்துக்கொண்ட அவள் அம்மா வண்ணப்புத்தகம் எடுத்துவரையத்தந்தாள்... மூடிய பெட்டியை மும்முரமாய் வரைந்தபின்...அவள் கேட்டாள்.. இந்த பெட்டிக்குள் என்ன இருக்கு..?? நான் சொன்னேன்.. மலர்கள்.. இல்லை என்றாள். ஆடைகள் ...ம்ஹூம் என்றாள் புத்தகங்கள்... மறுத்தாள். பெட்டியின் பக்கத்திலே சாவியை வரைந்தாள்.. இப்போது கண்ணை மூடிய வண்ணம் அதை திறக்க வேண்டுமாம்.. .என் மூடிய விழிகளில் தெரிந்தது..பெட்டிக்குள் பிரபஞ்சம். .கண்ணைதிறந்த போது அவள் அம்மாவிற்காய் இன்னொரு சாவி வரைந்து கொண்டிருந்தாள்

பக்கங்கள்

வியாழன், 14 ஜனவரி, 2010

இன்னும் மிச்சம் இருக்கிறது

இன்னும்இருக்கிறது...
பேச மிச்சம்...
உன் மார்புச் சூட்டின்
வெப்பம் கொடுத்த கதகப்பில்
ஓயாது பேசும் வாய்...
உன் கைத் தலையணையில்
கண்கள் தாமாக செருகும்வரை
தீர்ப்பதில்லை பேச்சை உதடுகள்...
தூக்கத்திலும்
உம் கொட்டும் உன் உதடுகள்...
நான் பேசிய மிச்சம்
என் கனவுகளில்நீ பேசுகிறாய்...

1 கருத்து:

  1. chancey ellinga...

    epdinga eppdi ellam yesikerenga..

    algana ethugai monaiyoda..mmm

    great..

    supera erukunga unga kavithai..

    migavum rasithen..

    valga valamudan
    complan surya

    பதிலளிநீக்கு