செத்துக்கொண்டிருக்கிறது
கழுத்தில் சுருக்குடன் சாம்பல் நிற ஓணான் ஒன்று...
ஒவ்வொன்றாய் இறக்கை பிய்க்கப்பட்டு
உயிருக்குப் போராடுகிறது வண்ணத்துபூச்சி ஒன்று...
ஊர்ந்து வந்த வண்டொன்று
ஒற்றைக்கண் இழந்து திரும்புகிறது
கால்களுக்கிடையே வாலைச்சுருட்டிக்கொண்டு
ஊளையிட்டு ஓட்டம் எடுக்கிறது கல்லடிபட்ட நாய்
புதிதாய் வாங்கிய ஸ்பைடர்மேன்
கைவேறாய் கால்வேறாய்
வைத்தியம் பார்க்க வேண்டிய ஸ்திதியில்...
குழந்தைகளை வெறுத்தேன் தற்காலிகமாக...
கருப்புத்துணியால் கண்கள் கட்டப்பட்டு
துப்பாக்கி முனையில் நிர்வாண மனிதனொருவன்...
பார்த்தவுடன் தோன்றியது
நமக்குப்பிறந்தவர் தானே குழந்தைகள்...!!!
கரெக்ட்
பதிலளிநீக்குநமக்கு பிறந்தவர்கள் தானே குழந்தைகள்/என்ன சந்தேகம்? கவிதை அருமை.
பதிலளிநீக்குnalla irukku
பதிலளிநீக்குhttp://www.virutcham.com